அண்ணா பல்கலை. குற்றவாளிக்கு மாவுக்கட்டு புதிய தலைமுறை
குற்றம்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – குற்றவாளிக்கு மாவுக்கட்டு; 15 நாள் நீதிமன்ற காவல்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு. ஞானசேகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெ.அன்பரசன்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு ஜனவரி 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து, சைதாப்பேட்டை 11 வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் சுல்தான் ஹர்கான் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனின் இடது கை மற்றும் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளதால் நீதிமன்ற காவலில் ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள குற்றவாளிகள் சிகிச்சை பிரிவில் (Convict Ward) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அதிகாலை இரண்டு மணிக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள குற்றவாளிகள் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, போலீசார் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து சிகிச்சை முடிந்து அவர், புழல் சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.