குற்றம்

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்

webteam

தஞ்சையில் இரண்டரை வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த சத்யராஜ் என்பவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தஞ்சை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் தனது இரண்டரை வயது குழந்தையுடன் கடந்த 2012 ஆண்டு உறவினர் திருமணத்திற்குச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சத்யராஜ் என்பவர் குழந்தையை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சத்யராஜை கைது செய்தனர். இரு பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குழந்தையை சத்யராஜ் பாலியல் வன்கொடுமை செய்தது நிரூபனமானது. 

இந்நிலையில், சத்யராஜுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.