குற்றம்

10 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது

10 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது

webteam

இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட 10 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த காரைக்கால் சுங்கத்துறையினர் 3 பேரை கைது செய்தனர்.

இலங்கையில் இருந்து கிலோ கணக்கிலான தங்கக்கட்டிகள் சென்னைக்கு கடத்தி செல்லப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் சென்னை செல்லும் சுங்கச்சாவடிகளில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்காலில் உள்ள சுங்கச்சாவடிகளில் போலீஸார் வாகன சோதனை செய்துகொண்டிருந்த போது, சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்றில் தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சொகுசு காருடன், 10 கிலோ 800 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், பெண் உள்பட மூவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். படகு மூலம் கடத்திவரப்பட்ட தங்கக் கட்டிகளை சொகுசு காருக்கு மாற்றி சென்னைக்கு கடத்தி‌ச் செல்ல முயன்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தங்கக் கட்டிகளின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.