கொரோனா வைரஸ்

டெல்லி: 2020க்கு பிறகு முதன்முறையாக பூஜ்ஜியம் என பதிவான கொரோனா

webteam

டெல்லியில் 2020க்கு பிறகு முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு பூஜ்ஜியம் என பதிவாகியுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் தலைநகர் டெல்லியில், புதிதாக எவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை. டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 2020 இல் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் ஒரு கொரோனா தொற்று கூட உறுதி செய்யப்படவில்லை.

மேலும், நேர்மறை விகிதம் 0.00% மற்றும் கடந்த 24 மணி நேரத்தில் பூஜ்ஜிய கொரோனா வழக்குகளுடன், 10 நபர்கள் கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 9 கொரோனா நோயாளிகள் நோய்த்தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

இதனால் மொத்த மீட்பு விகிதமானது 19,80,781 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா இறப்புகள் எதுவும் பதிவாகாத நிலையில், ஒட்டு மொத்த இறப்பு எண்ணிக்கை 26,522 ஆக உள்ளது.

24 மணி நேரத்தில் 150 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில், 15 பேர் முதல் மருந்தையும், 32 பேர் இரண்டாவது மருந்தையும், 103 பேர் முன்னெச்சரிக்கை மருந்தையும் பெற்றனர். அதன்படி இதுவரை மொத்தம் 3,73,70,636 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.