கொரோனா வைரஸ்

வால்வு பொருத்தப்பட்ட என்95 மாஸ்க் அணியக்கூடாது ஏன்? ஆராய்ச்சியாளர் விளக்கம்

JustinDurai

வால்வுகள் பொருத்தப்பட்ட என்95 முகக்கவசத்தை பொதுமக்கள் அணிவதைத் தடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. வால்வு உள்ள முகக்கவச்சத்தை ஏன் அணியக்கூடாது என்பது குறித்து விளக்குகிறார் தொழில்துறை நுண்ணுயிரியல் ஆராய்ச்சியாளரான மணி ஜெயப்பிரகாஷ்.. 

''N 95 மாஸ்க்குகளில் இரு வகை உண்டு. வால்வு உள்ளது மற்றது வால்வு இல்லாதது. அதில் வால்வு உள்ள வகையை அறிவியலாளர்கள் வெகுகாலமாக கொரோனா நோய்த்தொற்று காலங்களில் அணியவேண்டாம் என்று சொல்கின்றரனர். தற்போது மத்திய அரசும் இந்த மாதிரி வால்வு உள்ள மாஸ்க்குகளை பயண்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. காலந்தாழ்த்திய அறிவுரை என்றாலும் தேவையான ஒன்று.

வால்வு உள்ள மாஸ்க்குகள் கிருமிகளைத் தடுக்கும் என்றாலும் அது விஷவாயு கசிவு போன்ற சமயங்களில் அல்லது பயணங்களில் அணிவது உள்ளே வரும் காற்றை வடிகட்டியும் வெளியே செல்லும் காற்றை வடிகட்டாமலும் அனுப்பும். அப்படி செய்யும் போது மாஸ்க் போட்டவருக்கு பாதுகாப்பு உண்டு ஆனால் அவருக்கு வியாதி இருந்தால் அது மற்றவர்களுக்கு பரப்புவதை தடுக்காது.

ஆனால் மற்றவகையான வால்வு இல்லாத மாஸ்க்குகள் உள்ளே வரக்கூடிய காற்றை வடிகட்டுவதோடு மட்டுமல்ல வெளியே செல்லக்கூடிய காற்றையும் வடிகட்டும். அதனால் நோய் நமக்கு தொற்றாமலும், நமக்கு தொற்று இருந்தால் அது மற்றவர்களுக்குப் பரவாமலும் இருக்கும். முகக்கவசம் என்பது கொரோனா தொற்று பிறரிடம் இருந்து முகக்கவசம் அணிந்திருப்பவருக்கும், முகக்கவசம் அணிந்திருப்பவரிடம் இருந்து பிறரையும் பாதுகாக்கும் கவசமாக செயல்படுகிறது.  

ஆனால் ஒரு வழி திறப்பு வால்வுகள் கொண்ட N-95 முகக்கவசங்கள் அவ்வாறு செயல்படுவதில்லை. எனவே, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது சாதாரண துணியால் செய்த முகக்கவசத்தை அணிவதே சிறந்தது'' என்கிறார் அவர்.