ஓமைக்ரான் கொரோனா வைரஸின் இரண்டு புதிய துணை வகைகளான BA.4 மற்றும் BA.5 ஆகியவை மிகவும் தீவிரமாக பரவும் தொற்றுநோய்களா, ஆபத்தானவையா என்பதை ஆராய்ந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் BA.1ஓமைக்ரானின் பிறழ்வுகளான BA.4 மற்றும் BA.5 ஆகியவற்றை கண்காணிப்பு பட்டியலில் சேற்கனவே உலகளவில் அதிகமாக பரவி வரும் BA.1, BA.2, BA.1.1 மற்றும் BA.3 ஆகிய மாறுபாடுகளையும் கண்காணித்து வருகிறது.
இந்த வகைகளின் கூடுதல் மாறுபாடுகள் மற்றும் நோயெதிர்ப்பு தப்பிக்கும் திறனில் அவற்றின் தாக்கத்தைப் புரிந்து கொள்ள மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டியதன் காரணமாக இவற்றை கண்காணிக்கத் தொடங்கியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது உலகளவில் BA.2 வகை வைரஸ் அதிகமாக பரவுகிறது, ஆனால் இந்த வகை கடுமையான பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், BA.4 மற்றும் BA.5 வகை வைரஸ்கள் உலகளவில் சிலருக்கு மட்டுமே பரவியுள்ளன. BA.4 வகை வைரஸ் தென்னாப்பிரிக்கா, டென்மார்க், போட்ஸ்வானா, ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தில் ஜனவரி 10 முதல் மார்ச் 30 வரை கண்டறியப்பட்டதாக இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் கூறியது. BA.5 வகை வைரஸ் தென்னாப்பிரிக்கா மற்றும் போட்ஸ்வானாவில் கண்டறியப்பட்டுள்ளது