கடந்த மாதம் பணியிடங்களில் கொரோனாவால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். பணியிடங்களில் சில மாற்றங்களை உருவாக்குவதன்மூலம் பாதிப்பின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் மருத்துவரும், பொது சுகாதார நிபுணருமான பிரப்தீப் கவுர்.
1. 100% கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும்
2. சமூக இடைவெளி விட்டு பணியிடங்களை மறுசீரமைக்கவேண்டும்
3. நிறைய இடங்களில் சானிடைசர்களை வைக்கவேண்டும்
4. இடைவேளைக்கு ஒரே நேரத்தில் செல்லும் நபர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும்.
5. கொரோனா கண்காணிப்பு குழுக்களை அவரவர் நிறுவனத்தில் அமைக்கவேண்டும்.
6. அறிகுறிகள் தென்படும் ஆரம்பத்திலேயே அதுபற்றி தெரிவிக்க வழிமுறைகளை அமைப்பதுடன் அவர்கள் அலுவலகத்திற்கு வருவதை தடுக்கவேண்டும்.
7. அறிகுறிகள் மற்றும் அதன் ஆபத்துகள் பற்றி சோதனையை கட்டாயப்படுத்தும் கொள்கையை உருவாக்கவேண்டும்.
8. சம்பளக் குறைப்பு இல்லாமல் வீட்டு தனிமைப்படுத்தல்/ தனிமைப்படுத்தலை அனுமதிக்கவும்.
9. அலுவலகத்திற்குள்ளே கூட்டம் கூடுதலை அனுமதிக்கக்கூடாது.
10. இடைவேளை/ மற்றும் மதிய உணவு வேளைகளில் குழுக்களாக அமர அனுமதிக்கக்கூடாது.