கொரோனா வைரஸ்

கோவாக்சின் தடுப்பு மருந்து சோதனைக்கு ஆரோக்கியமான நபர்கள் இன்று முதல் தேர்வு: எய்ம்ஸ்

webteam

கோவாக்சின் தடுப்பு மருந்து சோதனைக்கு இன்று முதல் நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் முழுமூச்சுடன் ஈடுபட்டுவருகின்றன. பல கட்ட சோதனைகளுக்கு பிறகே ஒரு மருந்து நோயாளிகளுக்கு கொடுக்கப்படும், ஆய்வக சோதனைகள், விலங்குகள் மீதான சோதனைகள், பிறகு கடைசி கட்ட சோதனையாக மனிதர்கள் மீது செலுத்துப்படுதல் அதன் பின்பு நோயாளிகளுக்கு வழங்குதல் என தொடரும்.

இந்நிலையில், புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத்பயோடெக் மருந்நு நிறுவனம் கோவாக்சின் என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது. பலகட்ட ஆராய்ச்சிகளுக்கு பின்னர், மனிதனுக்கு செலுத்தி ஆய்வு செய்யும் சோதனை தொடங்கியுள்ளது. இதற்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்கள் முழு உடல் தகுதியுடன், எந்த வித நோயும் இல்லாமல் இருக்க வேண்டும். அந்த நபர்களுக்கான பதிவு இன்று முதல் தொடங்கும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் சஞ்செய் ராய் தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் 18 வயது முதல் 55 வயது வரை இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

சோதனைக்கு விருப்பம் தெரிவிக்கும் நபர்கள் Ctaiims.covid19@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு மூலம் பதிவு செய்துகொள்ளலாம். அல்லது 7428847499 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.