கொரோனா வைரஸ்

எப்படி இருக்கிறது சென்னை நந்தம்பாக்கம் கொரோனா சிகிச்சை மையம்? - ஒரு பார்வை

Sinekadhara

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆக்சிஜன் வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.

வர்த்தக மையத்தில் 1000 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 400 படுக்கைகளில் நோயாளிகளை அனுமதிக்கவுள்ளனர். நண்பகலுக்குப் பிறகு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையில் இங்குள்ள மையத்திற்கு மாற்றம் செய்யப்படவுள்ளனர்.

ராஜீவ்காந்தி, ஓமந்தூரார் உள்ளிட்ட மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் இங்கு பணிபுரிய உள்ளனர். இந்த மையத்தில் சிசிடிவி கேமரா, ஒலிப்பெருக்கி, WI-FI வசதிகளும் ஏற்பாடு செய்யப்படுள்ளது.

சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சியின் நேரடி கண்காணிப்பில் கொரோனா சிகிச்சை மையம் செயல்படவுள்ளது.