கொரோனா வைரஸ்

ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பு: கோரிக்கை வைத்த மா.சுப்பிரமணியன் - உறுதியளித்த எல்.முருகன்

ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பு: கோரிக்கை வைத்த மா.சுப்பிரமணியன் - உறுதியளித்த எல்.முருகன்

Veeramani

தனியாருக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளையும் ஒன்றிய அரசே கொள்முதல் செய்தால், தமிழகத்தில் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்படும் என மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுதந்திர தினத்தையொட்டி சென்னை விவேகானந்தர் இல்லத்தில் புகைப்பட கண்காட்சி மற்றும் கொரோனா விழிப்புணர்வு வாகனம் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், மாநில மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பங்கேற்றனர். அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், உற்பத்தியாகும் தடுப்பூசிகளில் 25 சதவீதம் தனியாருக்கு விற்கப்படுவதாகவும், அதனை தடுத்து நிறுத்தி ஒன்றிய அரசே கொள்முதல் செய்தால் அதிக அளவிலான தடுப்பூசிகளை செலுத்தலாம் எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் எனவும், எந்த மாநிலங்களுக்கும் மத்திய அரசு பாகுபாடு காட்டுவது இல்லை எனவும் தெரிவித்தார்.