கொரோனா வைரஸ்

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பழங்குடி மக்களின் மூங்கில் தடுப்பு அரண்

Sinekadhara

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பழங்குடியின கிராமத்திற்குள் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க சாலைகளில் மூங்கில் மரங்களைக்கொண்டு தடுப்பு அமைத்து பாதுகாப்பு அரணை ஏற்படுத்தியுள்ளனர் பழங்குடியின மக்கள்.

கூடலூர் அருகே கோடமூலா பழங்குடியின கிராம மக்கள் தங்களை நோய்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளனர். இதன்படி, கிராமத்துக்குச் செல்லும் 4 சாலைகளில் மூங்கில் மரங்களை வெட்டிப்போட்டு அவர்களாகவே தடுப்புகளை அமைத்துள்ளனர். காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொண்டுவரும் வாகனங்கள்கூட தடுப்புகளுக்கு பின்னால்தான் நிற்கவேண்டும். பொருட்கள் தேவை இருந்தால், மக்களே சாலைக்கு வந்து பொருட்களை வாங்கிச்செல்கிறார்கள்.