கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 29976 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. நேற்றைய பாதிப்பு 30055 என்ற எண்ணிக்கையில் இருந்து சற்றே குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 27,507 தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். 47 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 59 மற்றும் 62 வயதை சார்ந்த இரண்டு பேர் இணை நோய்கள் இன்றி கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் தொற்று உறுதி செய்யப்படும் (Positivity rate) விகிதம் 20-லிருந்து 20.2 என உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட 29976 பேரில் 18 பேர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சாலை மார்க்கமாக தமிழ்நாடு வந்தவர்கள். மாநிலத்தில் இதுவரை மொத்தமாக 32,24,236 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மாநிலத்தில் 2,13,692 பேர் தற்போது நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனர். அதில் 1132 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். இன்று பாதிக்கப்பட்டவர்களில் 17,147 ஆண்கள் மற்றும் 12,829 பெண்கள் அடங்குவர்.
தலைநகர் சென்னையில் 5973 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை 3740 பேர், செங்கல்பட்டு 1883 பேர், திருப்பூர் 1787 பேர், சேலம் 1457 பேர், ஈரோடு 1302 பேர், கன்னியாகுமரி 1035 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.