கொரோனா வைரஸ்

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 17,934 ஆக பதிவு - தொடர்ந்து அதிகரிக்கும் நோய் தொற்று

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 17,934 ஆக பதிவு - தொடர்ந்து அதிகரிக்கும் நோய் தொற்று

EllusamyKarthik

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 17,934 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு பரிசோதனை மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 15,379 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். 19 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். 88,959 பேர் தற்போது நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 7300 பேர் மருத்துவமனையிலும், 82000 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தலிலும் உள்ளனர். 

4,039 பேர் நோய் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். தலைநகர் சென்னையில் தொற்று உறுதியாகும் சதவீதம் 21.3% எனவும்,  தமிழகத்தில் 11.3% எனவும் அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட 17,934 பேரில் 36 பேர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வந்தவர்கள். பாதிக்கப்பட்டவர்களில் 10652 பேர் ஆண்கள், 7282 பேர் பெண்கள். 

சென்னையில் இன்று ஒரே நாளில் 7372 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு 1840 பேர், கோவை 981, திருவள்ளூர் 931, காஞ்சிபுரம் 620, மதுரை 498, நெல்லை 451, திருச்சி 444, ராணிப்பேட்டை 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.