கொரோனா வைரஸ்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 29 ஆக அதிகரிப்பு !

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 29 ஆக அதிகரிப்பு !

jagadeesh

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

லண்டனில் இருந்து சென்னை வந்த 24 வயசு இளைஞருக்கும், 65 வயது பெண்ணுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இருவருக்கும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் "துபாயில் இருந்து திருச்சி வந்த 24 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிசிக்கையளிக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் இதுவரை 29 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர கண்காணிப்புடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.