கொரோனா வைரஸ்

முறையான சிகிச்சையில்லாததால் கொரோனா நோயாளி மரணம் எனப் புகார் - மருத்துவமனைக்கு நோட்டீஸ்.

Veeramani

திருப்பூரில் 19.05 இலட்சம் செலுத்தியும் முறையாக கொரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்படாமல் நோயாளி உயிரிழந்தார் என்று எழுந்த புகாரில், மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை இணை இயக்குநர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையத்தை சேர்ந்த சுப்ரமணியன்(62) என்பவர் கடந்த மாதம் 3 ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக பெருமாநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரலில் 10 சதவீதத் தொற்று இருந்த அவர் வெண்டிலேட்டரில் சிகிச்சைப்பெற்றார்.

ஆனால், மே24 ல் ஆக்சிஜன் அதிகம் தேவைப்படுவதால் வேறு மருத்துவமனைக்கு மாற்ற பரிந்துரைத்தனர். வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சுப்ரமணியன் மே 25இல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், ஆனால் தனியார் மருத்துவமனைக்கு 19.05 இலட்ச ரூபாய் கட்டணம் செலுத்தியும் முறையான சிகிச்சை மேற்கொள்ளவில்லை என அவரது மகன் தெரிவித்தார். இது தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் சார்பில் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.