கொரோனா வைரஸ்

'இன்னும் பல அலைகள் வரலாம்; கொரோனாவுடன் வாழ பழக வேண்டும்' - வைராலஜிஸ்ட் ககன்தீப் காங்

'இன்னும் பல அலைகள் வரலாம்; கொரோனாவுடன் வாழ பழக வேண்டும்' - வைராலஜிஸ்ட் ககன்தீப் காங்

JustinDurai

''இந்தியாவில் எந்த தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக பயன்படுத்த வேண்டும் என்ற முடிவைத் தெரிவிப்பதற்கான தரவு மிகவும் குறைவாகவே உள்ளது'' என்று கூறியுள்ளார் மூத்த வைராலஜிஸ்ட் ககன்தீப் காங்.

உலகம் முழுக்க ஒமைக்ரான் பாதிப்புகள் உச்சம் அடைய தொடங்கி உள்ளது. இதனால் பல நாடுகளில் 3ம் அலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 1,270 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்து கொரோனா உறுதியானோரில் சுமார் 80 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் நம் வாழ்வின் ஒரு பகுதி என்று இப்போது நாம் கருத வேண்டும் என்று கூறியுள்ளார் மூத்த வைராலஜிஸ்ட் ககன்தீப் காங்.

அவர் கூறுகையில், ''“நாம் கொரோனா மற்றும் அதன் பிறழ்வுகளுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும், அவை தொடர்ந்து வெளிப்படும். இன்னும் பல அலைகள் வரலாம். ஆனால் அதிர்ஷ்டவசமாக, ஓமைக்ரான் மற்ற வகைகளைக் காட்டிலும் குறைவான தீவிரத்தன்மை கொண்டதாகத் தெரிகிறது. பொதுவாக கொரோனா நோய்த்தொற்றுகள் குழந்தைகளை கடுமையாக தாக்குவதில்லை என்பதால், நாம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று நான் நம்புகிறேன். இந்தியாவில் எந்த தடுப்பூசியை பூஸ்டர் டோஸாகப் பயன்படுத்த வேண்டும் என்ற முடிவைத் தெரிவிப்பதற்கான தரவு மிகவும் குறைவாகவே உள்ளது'' என்றார்.