கொரோனா வைரஸ்

'உருமாறிய கொரோனா வைரஸ் 42 நாடுகளுக்கு பரவியுள்ளது' - உலக சுகாதார அமைப்பு

கலிலுல்லா

உருமாறிய புதிய கொரோனா இந்தியா உள்பட 42 நாடுகளுக்கு பரவியுள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

டெல்டா வகை கொரோனா வைரஸ் மாற்றம் கண்டு வேகமாக பரவி வருகிறது. இதற்கு AY 4.2 என பெயரிடப்பட்டுள்ளது. இது டெல்டா வைரஸைவிட 15 சதவிகிதம் கூடுதலாக பரவக்கூடியதாகும். தற்போது இந்த வைரஸ், இந்தியா, பிரிட்டன் உள்பட 42 நாடுகளுக்கு பரவியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தான் இந்த வைரஸின் பாதிப்பு அதிகம் இருக்கிறது.

இதுவரை ஆந்திராவில் 7 பேருக்கும், கேரளாவில் 4 பேருக்கும், தெலங்கானா, கர்நாடகத்தில் தலா இருவருக்கும், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீரில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 17 பேருக்கு பாதித்துள்ளது. ஆகவே பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.