கொரோனா வைரஸ்

கொரோனா தடுப்பு பணியில் பணியாற்றுபவர்களுக்கு 10% சம்பள உயர்வு – தெலங்கானா அரசு

கொரோனா தடுப்பு பணியில் பணியாற்றுபவர்களுக்கு 10% சம்பள உயர்வு – தெலங்கானா அரசு

Veeramani

கொரோனா தடுப்புப் பணிகளில் பங்காற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், சுகாதாரத் துறையின் ஒப்பந்த பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், நகராட்சி, பஞ்சாயத்து பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 100 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 “ சுகாதாரத்துறையின் வேண்டுகோளை ஏற்று 1200 முதுநிலை மருத்துவர்கள் மற்றும் 200 மருத்துவர்கள் பணியிடங்களை நிரப்பவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களும் தேவைக்கேற்ப பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் கொரோனோ தடுப்பிற்கு பயன்படும் மருந்துகள் வாங்கவும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனோ தடுப்பு மருத்துகள் தட்டுபாடு இன்றி அனைவருக்கும் கிடைக்கும். தெலங்கானா மக்களுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டால் அவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று அதிக தொகை செலவழிக்க தேவையில்லை, அரசு மருத்துவமனைகளிலேயே சிறப்பான சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ்

மேலும் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவுக்கு படுக்கை வசதிகள் மற்றும் வெண்டிலேட்டர் வசதிகள் போன்றவையும் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.