தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,01,070 ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் நடைபெற்ற நிலையில், அவற்றில் 802 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவர்களில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், இருவர் என மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
இன்றைய எண்ணிக்கையுடன் சேர்த்து, இதுவரை தமிழகத்தில் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 27,15,632 என்றாகியுள்ளது. இதுவரை தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,27,47,257 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 24 மணிநேரத்தில் 918 பேர் நோயிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் 26,69,848 பேர் குணமாகியுள்ளார். 9,488 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பு அதிகம் உருவான மாவட்டங்களாக கோவை (123 பேர்), சென்னை (122 பேர்), ஈரோடு (77) உள்ளன.
இன்றைய தினம் மட்டும், தமிழகத்தில் கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 36,296 என்றாகியுள்ளது.
தொடர்புடைய செய்தி: காற்று மாசு காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்: டெல்லி அரசு முடிவு