கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவ வசதிகளுடன் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளும் அம்மா கோவிட்-19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ இந்தியாவிலேயே முதன்முறையாக கொரோனா நோயாளிகளுக்கான வீட்டு பராமரிப்புத் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டம் மூலமாக 2500 ரூபாயில் 14 நாட்களுக்கான மருத்துவ தொகுப்பினை பெறலாம். இந்த தொகுப்பில் பல்ஸ் ஆக்சிமீட்டர், வெப்பமானி, சோப்பு, மருந்து, மாத்திரைகள், 14 முகக்கவசங்கள், கோவிட் கையேடு ஆகியவை இருக்கும். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்தபடி இருப்பார்கள். இத்திட்டத்தின் வழியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் மருத்துவவசதிகளுடன் தங்களை தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளமுடியும்” என்று தெரிவித்துள்ளது.