கொரோனா வைரஸ்

தமிழகத்தில் பத்தாயிரத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு

தமிழகத்தில் பத்தாயிரத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு

Sinekadhara

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இன்று 68 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த இறப்புகள் 10,052ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 5,088 பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. ஒட்டுமொத்தமாக 6 லட்சத்து 40 ஆயிரத்து 943 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 5718 பேர்குணமாகி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 5லட்சத்து 86 ஆயிரத்து 454 பேர் இதுவரை கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பியிருக்கின்றனர்.

சென்னையில் 15வது நாளாக 1000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இன்று மட்டும் 1295 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதற்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கோவை உள்ளது.