கொரோனா வைரஸ்

கொரோனா: சிறந்ததா மூக்குவழி தெளிப்பான்? - ஆய்வின் வெளியான தகவல்

Sinekadhara

கொரோனா தொற்று பாதிப்பை மூக்குவழி தெளிப்பான் மருந்து 99 சதவிகிதம் குணப்படுத்துவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொரோனாவுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், மூக்குவழி தெளிப்பான் மருந்தை க்ளென்மார்க் மருந்து நிறுவனம் தயாரித்துள்ளது. அதன் மூன்றாம் கட்ட ஆய்வில், நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்ட மற்றும் போடப்படாத கொரோனா தொற்று பாதித்த 306 பேருக்கு வழங்கி சோதனை செய்யப்பட்டது. அதில் 24 மணி நேரத்தில் 94 சதவிகிதமும் 48 மணி நேரத்தில் 99 சதவிகிமும் தொற்று நீங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

நைட்ரிக் ஆக்சைடு கொண்ட மூக்குவழி தெளிப்பான் மருந்து கொரோனாவை குணப்படுத்துவது ஆய்வில் உறுதியானதால், விரைவில் அதன் விற்பனைக்கு ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.