கொரோனா வைரஸ்

’கொரோனாவுக்கு சுமார் 30 லட்சம் பேர் பலியா?’ - “தவறான தரவு” என ஆய்வினை மறுத்த இந்திய அரசு

’கொரோனாவுக்கு சுமார் 30 லட்சம் பேர் பலியா?’ - “தவறான தரவு” என ஆய்வினை மறுத்த இந்திய அரசு

EllusamyKarthik

இந்தியாவில் கடந்த 2021 நவம்பர் வரையில் சுமார் 32 முதல் 37 லட்சம் பேர் வரை கொரோனா தொற்று பாதிப்பினால் உயிரிழந்ததாக சொல்லி ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இது இந்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கையை காட்டிலும் பன்மடங்கு அதிகம். அந்த ஆய்வறிக்கை குறித்து பல்வேறு பத்திரிகைகள் செய்தி வெளியிட்ட நிலையில் இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. 

 

தவறான, துல்லியமற்ற மற்றும் உண்மைகளின் அடிப்படையில் இல்லாத தரவுகள் இவை என சொல்லியுள்ளது அரசு. வெளிப்படையான முறையில் கொரோனா தொற்று பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து அரசு தகவல் அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வலுவான அமைப்பை கொண்டு உயிரிழப்பு எண்ணிக்கையை வெளியீட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் இதுவரை 5,10,413 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 37,962 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.