கொரோனா வைரஸ்

மாநிலங்களுக்கு 149.70 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது - மத்திய அரசு

Veeramani

மத்திய அரசின் தொகுப்பில் இருந்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 149.70 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .

நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதற்கு இணங்க தடுப்பூசி போடும் பணியை மாநில அரசுகள் வேகப்படுத்தி உள்ளன. நாடு முழுவதும் இதுவரை 143.83 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடம் மத்திய அரசு கேட்டு கொண்டிருக்கிறது. மேலும் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் இருந்து 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி, மத்திய அரசின் தொகுப்பிலிருந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு 1,49,70,76,985 டோஸ்கள் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது மாநிலங்கள் வசம் 16,93,09,031 கோடி டோஸ்கள் தடுப்பூசிகள் இருப்பு உள்ளன. சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணியை அதிகப்படுத்த வேண்டும் என சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.