கொரோனா வைரஸ்

கொரோனா 3ஆவது அலை குறித்த எச்சரிக்கை தேவை - சௌமியா சுவாமிநாதன்

Sinekadhara

தற்போதைய சூழலில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது அவசியமில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். அதே நேரம் எச்சரிக்கையுடன் இருந்து கொரோனா 3ஆவது அலை பரவாமல் தடுப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இன்று பேசிய அவர், ‘’கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது அவசியம். 65% குழந்தைகளுக்கு ஏற்கனவே ஆன்டிபாடி உருவாகியுள்ளது. குழந்தைகள் பலரும் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது. குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்படவில்லை, அறிகுறி இல்லாமலேயே நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது அவசியம் இல்லை. பள்ளிகள் திறப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்று வலியுறுத்தி உள்ளார்.