கொரோனா வைரஸ்

புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு உலக சுகாதார அமைப்பு கொடுத்த எச்சரிக்கை

Veeramani

புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால், புற்றுநோய், இதயநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

புகையிலை தடுப்பு திட்டத்தை தொடக்கிவைத்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ், அனைத்து நாடுகளும் தங்கள் மக்களை புகைப்பழக்கத்தில் இருந்து விடுவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார். கொரோனா வைரஸ் பாதிப்பு நேரடியாக நுரையீரல் தொடர்புடையது என்பதால் புகைப்பழக்கம் கொண்டவர்களுக்கு 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக புற்றுநோய், இதயநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.