கொரோனா வைரஸ்

கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்

webteam

கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் சித்த மருத்துவத்தில் உணவு முறை குறித்தும் நோய் எதிர்ப்பு சக்தி குறித்தும் மருத்துவர் கூறும் விளக்கங்களை தெரிந்து கொள்ளலாம்.

சித்த மருத்துவ பிரிவில் 2000க்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து அரசு சித்த மருத்துவர் கலா கூறுகையில், “மூதாதையர்கள் என்ன உணவு முறை பழக்கத்தை கடைபிடித்தார்களோ அதை பின்பற்ற வேண்டும். காலையில் மூச்சுப்பயிற்சி செய்வதன்மூலம் நுரையீரலும், இதயமும் பலப்படும். வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூளும், கல் உப்பும் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். பின்னர், கபசுர நீர் குடிக்க வேண்டும்.

இயற்கை முறையில் நாங்களே உணவு தயாரித்து கொடுத்து வந்தோம். இயற்கை முறையில் கொரோனாவை எதிர்த்து 100 சதவீதம் வெற்றிக்கொண்டுள்ளோம்” என்றார்.