கொரோனா வைரஸ்

சென்னை: கொரோனாவுக்கு இன்று 7 பேர் உயிரிழப்பு

சென்னை: கொரோனாவுக்கு இன்று 7 பேர் உயிரிழப்பு

Rasus

சென்னையில் இன்று கொரோனாவுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த சில தினங்களாக நாள்தோறும் கொரோனா பாதிப்பு 1000-ஐ தாண்டி வருகிறது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி மொத்தமாக 27,256 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 14,901 பேர் குணமடைந்துள்ளனர். 220 பேர் உயிரிழந்துள்ளனர். 12,132 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று கொரோனாவுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 2 பேர், ராஜூவ் காந்தி மருத்துவமனையில் 2 பேர், சென்னை கேம்சி மருத்துவமனையில் 3 பேர் என இதுவரை இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர்.