கொரோனா வைரஸ்

தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள்: பெட்ரோல், டீசல் பங்குகள் இயங்க அனுமதி

Sinekadhara

தமிழகத்தில் கொரோனா, ஒமைக்ரான் பரவலின் வேகம் அதிகரித்து வருவதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்திருக்கிறது. 

அதன்படி, முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை (09.01.22) அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல், டீசல் பங்குகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் ஆகியவை இயங்காது. 

முழு ஊரடங்கான 09.01.22 அன்று உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படும். உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மேற்சொன்ன நேரத்தில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.

09.01.22 மற்றும் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை விமானம், ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக, விமானம் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படும். அவ்வாறு பயணிக்கும்போது பயணச்சீட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.