நாட்டில் கொரோனா தொற்று சிகிச்சைக்காக கடந்த 14 மாதங்களில் 64,000 கோடி ரூபாயை பொதுமக்கள் செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
கொரோனா முதல் மற்றும் 2ஆவது அலையால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது ஒருபுறம் என்றால், அதனால் அவர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பு ஈடுசெய்ய முடியாத அளவிற்கு உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்தாண்டு ஜூன் வரையிலான 14 மாத காலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், பரிசோதனை மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக 64ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்திருப்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஐசியூ எனப்படும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சுய தொழில் செய்பவர்கள், சராசரியாக தங்களது 7 மாத ஊதியத்தை செலவிட்டுள்ளனர். சாதாரண தொழிலாளர்கள் தங்களது 15 மாத சம்பளத்தை செலவிட்டுள்ளனர். ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொள்வதற்கு சுயதொழில் செய்பவர்கள் 15 சதவிகிதம் அளவிற்கு செலவிட்டுள்ள நிலையில், சாதாரண தொழிலாளர்கள் 43 சதவிகித அளவுக்கு செலவிட்டிருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.