கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவித்தொகை
வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் “ கொரோனா தடுப்பு நடவடிக்கையால் அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டட தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள்,
விவசாயிகள், மீனவர்கள், கூலி வேலை செய்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வேலையிழந்துள்ளனர். இதனைக் கருத்தில்கொண்டு, அனைத்து குடும்ப
அட்டைதாரர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த பணமானது விரைவில் அவரவர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும். 3 லட்சத்து 44 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு உதவித் தொகை வழங்குவதன் மூலம் அரசுக்கு, 68 கோடியே 88 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவாகும்” என்று அவர் கூறினார்.