கொரோனா வைரஸ்

ஹெச்.ஐ.வி நோயாளிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் உயிரிழக்க வாய்ப்பு அதிகமா?

ஹெச்.ஐ.வி நோயாளிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் உயிரிழக்க வாய்ப்பு அதிகமா?

rajakannan

ஹெச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டல் உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. நோய் தொற்று தொடங்கி 5 மாதங்கள் ஆகியும் இன்னும் பாதிப்பு ஏறு முகத்திலேயே உள்ளது. கொரோனா நோய் தொற்றால் இதுவரை 70 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

கொரோனா நோய் தொற்றால் உயிரிழப்புகள் பலருக்கும் இணை நோய்களின் தாக்கம் அதிக அளவில் உள்ளன. இதில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுதிக்கப்படும் நீரிழிவு நோயாளிகள் அதிக அளவில் உயிரிழப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், இணை நோய்கள் எதுவும் இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காட்டிலும், ஹெச்.ஐ.வி நோயாளிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களின் உயிரிழப்புகள் 2.75 மடங்கு அதிகமாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ‘Western Cape Department of Health’ என்ற மருத்துவ சேவை அமைப்பு சார்பில் மேற்கொள்ள ஆய்வின் முடிவில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கொரோனா நோய் தொற்றுடையவர்கள் உயிரிழக்க 2.58 மடங்கு வாய்ப்பும், நுரையீரல் பாதிப்பு உடையவர்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டால் 1.41 மடங்கும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக அதிக அளவிற்கு நீரிழிவு உள்ளவர்கள் உயிரிழக்க 13 மடங்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. நீரிழிவு கட்டுப்படுத்தப்பட்டு இருந்தாலும் 4.65 மடங்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.