மதுரையில் 12 நாட்களுக்குப் பிறகு 2-ஆவது நாளாக போடப்படும் கோவாக்சின் தடுப்பூசியை பொதுமக்கள் ஆர்வமுடன் செலுத்திக் கொள்கின்றனர்.
மதுரை மாவட்டத்தில் 42 ஆயிரத்து 600 டோஸ் கையிருப்பில் உள்ள நிலையில், 60 மையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, கோவிஷீல்டு தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாவது தவணைக்கும், கோவாக்சின் 2-ஆவது தவணை செலுத்திக் கொள்பவர்களுக்கு மட்டும் போடப்படுகிறது.
கோவாக்சின் 2ஆம் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ள சுமார் 2 5ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர். இந்நிலையில், கோவாக்சின் செலுத்தும் மையங்கள் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.