கொரோனா வைரஸ்

‘அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே டெலிவரி.. மற்றவை கிடையாது’: அமேசான்

‘அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே டெலிவரி.. மற்றவை கிடையாது’: அமேசான்

jagadeesh

இந்தியாவில், அத்தியாவசியமற்ற பொருள்களின் விற்பனையை நிறுத்தி வைப்பதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. பிளிப்கார்ட் நிறுவனமும் தனது சேவையை நிறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் 21 நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மோடி தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்தியா முழுவதும் அத்தியாவசியப் பொருள்களின் விற்பனைக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்தியாவசியமற்ற பொருள்களின் விற்பனையை நிறுத்தி வைப்பதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோன்று தனது சேவையைத் தற்காலிகமாக நிறுத்துவதாக ஃபிளிப்கார்ட் நிறுவனமும் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்நிலையில், கொரோனா அதிகம் பாதித்த ஈரானில், சிக்கித் தவித்த இந்தியர்களை மத்திய அரசு சிறப்பு விமானம் மூலம் இன்று காலை இந்தியா அழைத்து வந்தது. சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்த 277 பேர் உடனடியாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு, முதற்கட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. இந்நிலையில், ஈரானில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்த திரும்பியுள்ள இந்தியர்களை ராணுவ மருத்துவ குழுவினர், தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.