கொரோனா வைரஸ்

'பிளாஸ்டிக்கில் 8 நாட்களும்; தோலில் 21 மணிநேரமும் ஓமைக்ரான் உயிர்வாழும்' - ஆய்வில் தகவல்

'பிளாஸ்டிக்கில் 8 நாட்களும்; தோலில் 21 மணிநேரமும் ஓமைக்ரான் உயிர்வாழும்' - ஆய்வில் தகவல்

EllusamyKarthik

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் ஒமைக்ரான் வகை திரிபு பிளாஸ்டிக்கில் 8 நாட்களும், தோலில் 21 மணி நேரமும் உயிர் வாழ கூடும் என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கொரோனாவின் மற்ற வகை திரிபுகளான ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டாவை காட்டிலும் அதிகம் என சொல்லப்பட்டுள்ளது. 

ஜப்பானில் உள்ள கியோட்டோ மாகாண மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் நீடித்த தன்மைதான் மற்ற திரிபுகளை காட்டிலும் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசரை பயன்படுத்தினால் ஒமைக்ரான் உட்பட அனைத்து திரிபுகளையும் 15 நொடிகளில் செயலிழக்க செய்து விடலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் சானிடைசரை தவறாமல் பயன்படுத்துமாறு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.