கொரோனா வைரஸ்

இந்தியா: ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 415 ஆக உயர்வு

இந்தியா: ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 415 ஆக உயர்வு

Veeramani

நாடு முழுவதும் ஒமைக்ரான் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 17 மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று பரவியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 108 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டதாகவும் , 42 பேர் நோயில் இருந்து குணமடைந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக டெல்லியில் 79 பேரும், குஜராத்தில் 43 பேரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து 34 ஆகவே உள்ளது.

சண்டிகர், லடாக், உத்தராகண்ட் மாநிலங்களில் புதிதாக தலா ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்தமாக நாடு முழுவதும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்திருக்கும் நிலையில், இதுவரை 115 பேர் குணமடைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.