கொரோனா வைரஸ்

ரெம்டெசிவிர் சோதனைக்கான ஆய்வு மருந்து தானே தவிர, உயிர் காக்கும் மருந்து அல்ல - ஐசிஎம்ஆர்

ரெம்டெசிவிர் சோதனைக்கான ஆய்வு மருந்து தானே தவிர, உயிர் காக்கும் மருந்து அல்ல - ஐசிஎம்ஆர்

JustinDurai

'ரெம்டெசிவிர்' மருந்து, உயிர் காக்கும் மருந்து அல்ல என்றும் அம்மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு அவசியமின்றி தரக் கூடாது எனவும்  எச்சரித்துள்ளது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்.

கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரெம்டெசிவிர் என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் வேளையில் ரெம்டெசிவிர் மருந்தின் தேவை அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், 'ரெம்டெசிவிர்' ஒரு சோதனைக்கான ஆய்வு மருந்து தானே தவிர, உயிர் காக்கும் மருந்து அல்ல. அந்த மருந்தால், இறப்பு விகிதம் குறைந்திருப்பதாக ஆய்வுகள் கூறவில்லை. எனவே, மருத்துவமனையில், ஆக்சிஜன் உதவியுடன் இருக்கும் நோயாளிகளுக்கு தேவைப்பட்டால் மட்டுமே, ரெம்டெசிவிர் வழங்கலாம். வீட்டுச் சூழலில் இருப்போர் கண்டிப்பாக போட்டுக் கொள்ளக்கூடாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) தெரிவித்துள்ளது.