“கொரோனா தொற்று பரவலின் தீவிரம் கடந்த முறையை காட்டிலும் அதிகமாக இருக்கும்” என்று நிதி ஆயோக் சுகாதார குழு உறுப்பினர் கூறியுள்ளார்.
“இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் தீவிரம் கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாக இருக்கும். அடுத்து வரும் நான்கு வாரங்கள் அபாயகரமானது. நோய் தொடரை கட்டுப்படுத்துவதில் மக்களின் பங்களிப்பும் அவசியம் தேவைப்படுகிறது. ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிரான போரில் வெல்வோம். மக்கள் தயங்காமல் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். உலகிலேயே 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது நம் தேசத்தில் மட்டும்தான்” என நிதி ஆயோக் சுகாதார குழு உறுப்பினரும், மருத்துவருமான வி. கே. பால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவலின் தீவிரம் படு வேகமாக அதிகரித்து வருகிறது. வெறும் 25 நாட்களில் நாள் ஒன்றுக்கு 20000 என இருந்த நோய் தொற்று பாதிப்பு 1 லட்சம் என்ற நிலையை எட்டியுள்ளது.
கடந்த மார்ச் 23 முதல் ஏப்ரல் 5 வரையிலான நாட்களில் மட்டும் சுமார் 9,99,253 வழக்குகள் புதிதாக இந்தியாவில் பதிவாகியுள்ளன.
நன்றி : ANI