கொரோனா வைரஸ்

ஒருவருக்குதான் கொரோனா வந்தது.. நாட்டுக்கே 3 நாட்கள் ஊரடங்கு அறிவித்த நியூசி. பிரதமர்

நிவேதா ஜெகராஜா

நியூசிலாந்து நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பி வந்த நிலையில், தற்போது அங்கு ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரேயொருவருக்கு தான் பாதிப்பு உறுதியென்றாலும்கூட, முன்னெச்சரிக்கையாக நியூசிலாந்து முழுவதும் அடுத்த 3 நாள்களுக்கு தொடர் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன்.

நியூசிலாந்தை சேர்ந்த ஆக்லாந்து என்ற பகுதியை சேர்ந்த 58 வயதான ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதியாகியிருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஆக்லாந்து மற்றும் கோரமண்டல் பகுதியில் ஒரு வாரத்துக்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதங்களில், இதுபோன்ற கொரோனாவுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளின் மூலம் நியூசிலாந்து கொரோனாவிலிருந்து வென்றிருந்தது.