கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ‘கிடுகிடு' உயர்வு: புதிதாக 27,553 பேருக்கு நோய்த் தொற்று

JustinDurai

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 27 ஆயிரத்து 553 பேருக்கு புதிதாக நோய் தொற்று கண்டறியப்பட்டிருப்பதாகவும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியை கடந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 249 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், ஒரே நாளில் 284 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 801 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தவர்கள் விழுக்காடு 98.27 ஆகவும், உயிரிழந்தோர் விழுக்காடு 1.38 ஆகவும் உள்ளது. அதே போல் நாடு முழுவதும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 525 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 460 பேரும், டெல்லியில் 251 பேரும், குஜராத்தில் 136 பேரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.