கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற அதிமுக எம்எல்ஏ மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 20-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அதிமுக எம்எல்ஏ நார்த்தாமலை ஆறுமுகத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அன்றைய தினமே அங்கிருந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.
கடந்த 4 நாட்களாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்எல்ஏ ஆறுமுகம், நேற்று இரவு மீண்டும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரின் இந்த தொடர் இடமாறுதல்கள் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.