கொரோனா வைரஸ்

மாஸ்க், தனிநபர் இடைவெளி இந்தியாவில் 2 லட்சம் மரணத்தைத் தடுக்கும் -ஆராய்ச்சியாளர்கள்

மாஸ்க், தனிநபர் இடைவெளி இந்தியாவில் 2 லட்சம் மரணத்தைத் தடுக்கும் -ஆராய்ச்சியாளர்கள்

Sinekadhara

இந்தியாவில் மாஸ்க் மற்றும் முறையான தனிநபர் இடைவெளியைக் கடைபிடிப்பதன்மூலம் டிசம்பருக்குள் சுமார் 2 லட்சம் கொரோனா மரணத்தைத் தடுக்கலாம் என்கிறது வாஷிங்டன் ஐ.எச்.எம்.இ பல்கலைக்கழகம்.

இந்தியா மக்கள்தொகை அதிகமான நாடுகளில் ஒன்று. இங்கு பொது சுகாதாரத் துறையின் வழிகாட்டல்களை முறையாக கடைபிடிப்பதன் மூலமே கொரோனாவைக் கட்டுப்படுத்தமுடியும் என்கிறார் ஐ.எச்.எம்.இ இயக்குநர் கிறிஸ்டோபர் முர்ரே. மேலும் தனிநபர்கள் மாஸ்க் மற்றும் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதுபற்றி இன்று, நாளை எடுக்கும் முடிவுகள்தான் எதிர்காலத்தில் அவர்களை பாதுகாக்கும் என்கிறார் முர்ரே.

மாஸ்க் அணிவது தனிநபர் இடைவெளியைக் கடைபிடிப்பதுதான் நோய்பரவலைக் குறைத்து மக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் என ஹரியானா மாநில அசோகா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் உயிரியல்துறை பேராசியர் கவுதம் மேனன் கூறியுள்ளார்.

மேலும் ஐ.எச்.எம்.இ பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுகளின்படி, டிசம்பர் நடுப்பகுதியில் சுமார் 6 மில்லியன் மக்கள் ஒருநாளில் பாதிக்கப்படுவார்கள் மற்றும் 5 லட்சம்வரை இறப்புகள் நேரிடலாம் என மேனன் கூறுகிறார். இருப்பினும் மற்ற மதிப்பீடுகளுடன் ஒப்பிடும்போது இவை சற்று அதிகமாக இருந்தாலும், டிசம்பர் நடுப்பகுதிக்கு முன்னதாகவே பாதிப்பு உச்சத்தைத் தொடும் வாய்ப்புகள் அதிகம் என்கிறார்.

மேலும் இதற்கு இந்தியாவிலேயே பதில் இருப்பதாக ஐ.எச்.எம்.இ பல்கலைக்கழகம் கூறுகிறது. இந்த மாதிரி ஆய்வின்படி, டெல்லியில் நடத்தப்பட்ட சோதனையில் மாஸ்க் அணிதல், தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல் போன்றவை நோய்த்தொற்றை பரவலாக குறைத்திருப்பதாகக் கூறுகிறது. ஆகஸ்ட் பிற்பகுதியில் 60 ஆயிரத்தில் இருந்து டிசம்பர் முதல் தேதிக்குள் 2லட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

மேலும் அந்த ஆராய்ச்சியின்படி, டிசம்பருக்குள் 13 மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் சுமார் 10000 இறப்புகள் ஏற்படக்கூடும். ஆனால் மகாராஸ்டிராவில் இப்பொழுதே இறப்பு இந்த எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு தடுப்பூசி வராவிட்டால், இந்தியாவின் மக்கள் தொகையில் பெரும்பாலானோர் பாதிக்கப்படுவார்கள். சுகாதாரம் மற்றும் ஊரடங்கை முழுமையாக கடைபிடித்தால் மட்டுமே தொற்றுநோய் தாக்கத்தைக் குறைக்கமுடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.