கொரோனா வைரஸ்

வடமாநிலங்களிலிருந்து தமிழகம் வரும் மாணவர்களால் கொரோனா அதிகரிப்பு - மா.சுப்பிரமணியன்

Sinekadhara

தமிழகத்தில் மூன்று மாதங்களுக்கு மேலாக ஒருநாளில் 100-க்கும் கீழ் கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. இந்நிலையில் வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு படிக்கவரும் மாணவர்களால், கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துவருவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

விஐடி கல்வி நிறுவனத்தில் 12, 13-ஆம் தேதிகளில் கொரோனா தொற்று பரவத் தொடங்கி, தற்போது அங்கு 163 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாகவும், மேலும் 1,500 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தொற்று அதிகரிப்பையடுத்து, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கிடையே, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ள மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா மீண்டும் அதிகரிப்பதாகவும், இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதன் அறிகுறி என்றும் தெரிவித்துள்ளார். எனவே அடுத்த சில வாரங்களுக்கு நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அவசியம் என்றும் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.