தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதியானதா என்பது குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் விளக்கமளித்தனர்.
அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில், ‘’ஒமைக்ரான் பரவல் நாடுகளிலிருந்து இதுவரை 11,481 பேர் தமிழகம் வந்துள்ளனர். அதில் 37 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் 4 பேர் குணமடைந்துள்ளனர். நைஜீரியா நாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது; அவரது மரபணுவில் மாற்றம் உள்ளது.
எனவே நைஜீரியா நாட்டிலிருந்து வந்தவர் மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேர் என 7 பேரின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளை சோதனை முடிவுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது’’ எனத் தெரிவித்தார்.