இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 83,883 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்த பாதிப்பு 38,53,406 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 38,53,406 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 29,70,492 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 8,15,538 பேருக்கு கொரோனா நோய்த்தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை 67,376 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 83,883 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 68,584 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 1,043 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்,11,72,179 கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தம் 4,55,09,380 கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.