கொரோனா வைரஸ்

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா - 40 லட்சம் மக்கள் வசிக்கும் லான்ஜோ நகரில் ஊரடங்கு அறிவிப்பு

Sinekadhara

சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து லான்ஜோ நகரில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் தொடங்கியிருக்கிறது. இன்று சீனாவில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்திருக்கிறது சீன அரசு.

இந்நிலையில் சுமார் 4 மில்லியன் மக்கள் வசிக்கும் சீனாவின் வடமேற்கு நகரமான லான்ஜோவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தியாவசிய தேவைகள் தவிர பொதுமக்கள் வெளியே நடமாடக் கூடாது எனவும், அனைத்து வேலைகளும் வீட்டிலிருந்தபடிதான் செய்யவேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கிறது.

முன்னதாக 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் வூஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவியதாக சொல்லப்பட்டது. பின்னர், சீனாவில் பெரிய முயற்சிகள் எடுக்கப்பட்டு கொரோனாவும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்தான், தற்போது சீனாவில் மீண்டும் கொரானாவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.