கொரோனா வைரஸ்

தடுப்பூசிக்கும் உணவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை - கோவை மருத்துவக் கல்லூரி முதல்வர்

Sinekadhara

"தடுப்பூசிக்கும் உணவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை" என்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன. அதில் முக்கியமானது தடுப்பூசிக்கு முன்னும், பின்னும் என்ன உணவு எடுத்துக் கொள்ளலாம் என்பது.

இதுதொடர்பாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலாவிடம் கேட்டபோது, "தடுப்பூசி போடும் முன்பு, குறிப்பிட்ட உணவை எடுக்கக்கூடாது என கட்டுப்பாடு ஏதும் இல்லை. தடுப்பூசிக்கு முன்பு இறைச்சி உணவை எடுக்கக்கூடாது என அறிவியல்பூர்வமான நிரூபணம் ஏதும் இல்லை. காய்கறிகள், புரோட்டீன்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளலாம். தடுப்பூசி போடுபவர்கள் மதுவை தவிர்ப்பது நல்லது.

தடுப்பூசி எடுப்பதற்கு முன்பு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளவர்கள் பரிசோதனை செய்து கொள்ளலாம். ரத்தத்தில் தொற்று ஏதும் உள்ளதா என அறியும் சிஆர்பி சோதனை செய்து, அதிக தொற்று இருந்தால் தடுப்பூசியை தவிர்க்கலாம்" என்றார் அவர்.