கொரோனா வைரஸ்

கேரளா: அக்டோபர் 25 முதல் திரையரங்குகள், உட்புற அரங்குகளுக்கு 50% இருக்கைகளுடன் அனுமதி  

Veeramani

கேரளாவில் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் சினிமா திரையரங்குகள் மற்றும் உட்புற ஆடிட்டோரியங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொடர்பான பல புதிய தளர்வுகளை இன்று அறிவித்துள்ள கேரள அரசு, கோவிட் -19 தடுப்பூசி செலுதிக்கொண்ட அனைத்து ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் 50% இருக்கைகளை நிரப்பும் வகையில் திறக்கப்படும் தியேட்டர்கள் மற்றும் ஆடிட்டோரியங்களில் நுழையலாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருக்கிறார்.

கேரளாவில் கடந்த சில நாட்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது, கேரளாவில் இன்று 96,835 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் புதிதாக இன்று 13,217 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் நேற்று 1,05,368 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் புதிதாக 13,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

கேரளாவில் மொத்தபாதிப்பு எண்ணிக்கை 47,07,909 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு இன்று 121 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை 25,303 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மாநிலம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 1,41,155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 14,437 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 45,40,866 பேர் குணமடைந்துள்ளனர்.