கொரோனா வைரஸ்

கேரளாவில் கொரோனா விதிமீறல் அபராதம்: எத்தனை கோடி வசூல்?

Sinekadhara

கேரளாவில் கொரானா விதிமீறல் தொடர்பாக இதுவரை 350 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதல்முறையாக 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கேரளாவில் கொரோனா கண்டறியப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் கொரோனா பரவியதால், 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவலைத் தடுக்க கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. விதிகளை மீறுவோருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.

இதுவரை 350 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் முகக்கவசம் அணியாததற்காக மட்டும் 215 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மார்ச் 15 ஆம் தேதி வரை ஏழு லட்சத்து ஆயிரத்து 706 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.