மூன்று மாதங்களுக்கு பிறகு கேரளாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு மீண்டும் 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31, 445 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இதுவரை கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 38,83,429 ஆக உள்ளது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 215 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 19,972 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,271 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 36,92,628 ஆக உள்ளது. கேரளாவில் தற்போது 1,70, 292 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் கொரோனா நேர்மறை விகிதம் 19 % ஆக உள்ளது.
கடந்த மே மாதம் 20 ஆம் தேதி கேரளாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 30,491 ஆக இருந்தது, 3 மாதங்களுக்கு பின்னர் மாநிலத்தின் ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.